உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போனில் ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் துாக்கில் தற்கொலை

போனில் ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் துாக்கில் தற்கொலை

அனுப்பர்பாளையம் : திருப்பூர் அருகே மொபைல் போனில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, இளைஞர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி, அம்பாள் நகரை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் ஸ்ரீதர், 22. ஒர்க் ஷாப்பில் வெல்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதிலிருந்து மீட்க கடந்த ஒரு வாரம் முன், பெற்றோர் வீட்டை காலி செய்து விஜயமங்கலம் - பொன்முடி பகுதியில் குடியேறினர். ஸ்ரீதர் அங்கு செல்ல மறுத்து வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஸ்ரீதர், 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நானாக எடுத்த முடிவு,' என்று மொபைல் போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தங்கி இருந்த அறை மேற்கூரையில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை