உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணுக்கு தீ வைத்த வாலிபர் கைது

பெண்ணுக்கு தீ வைத்த வாலிபர் கைது

திருப்பூர், : திருநெல்வேலியை சேர்ந்தவர் சுந்தரி, 35. திருமணமாகி, இரண்டு மகள்கள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாட்டால் திருப்பூருக்கு வந்தார். கடந்த, 13ம் தேதி இரவு வேலை முடித்து வித்யாலயம் அருகே ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது ஒருவர் சுந்தரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தப்பி சென்றார். தீக்காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். அதில், பெண் மீது தீ வைத்த மணிகண்டன், 31 என்பவரை கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'சுந்தரி மற்றும் மணிகண்டனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கணவருக்கு தெரிய வர, மனைவியை கண்டித்தார்.சமீபத்தில் கணவரை பிரிந்து திருப்பூருக்கு வந்தார் சுந்தரி. இதையறிந்து, மணிகண்டனும் திருப்பூருக்கு வந்து சுந்தரியிடம் பேசுகையில், அவர் தவிர்த் தார். இதனால், ஆத்திரமடைந்து சுந்தரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிந்தது', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !