உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிவி நிருபரை வெட்டிய 2 பேர் கைது

டிவி நிருபரை வெட்டிய 2 பேர் கைது

பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் நேச பிரபு, 28, தனியார் 'டிவி' நிருபர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சிலர் பின்தொடர்ந்து நேச பிரபுவை அரிவாளால் வெட்டி தப்பினர். அருகிலிருந்தோர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு, கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேசபிரபுவை வெட்டிய ஈரோடு பிரவீன், 27, திருப்பூர் சரவணன், 23, ஆகியோரை போலீசார் கைது செய்து, கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி