| ADDED : ஜன 09, 2024 12:58 AM
பல்லடம்:பல்லடம் அடுத்த, அருள்புரம் தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப்பில், பொது ஆட்டோ ஓட்டுநர்கள்நலச்சங்கம் செயல்படுகிறது.இதில், 20 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சங்கத்தில் இல்லாத தனிநபர் ஒருவர், புதிதாக இரண்டு ஆட்டோக்களை இயக்கி, இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகையில், 'பத்து ஆண்டுக்கு மேலாக இங்கு ஆட்டோ ஓட்டி வருகிறோம். திடீரென, சங்கத்தில் இல்லாத தனிநபர் ஒருவர், 2 ஆட்டோ வைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். புதிதாக வந்த நபரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்,' என்றனர்.முன்னதாக, அருள்புரம் பஸ் ஸ்டாப்பில், ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி வைத்த ஓட்டுனர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.