உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகை திருடிய 2 பேர் கைது

நகை திருடிய 2 பேர் கைது

அவிநாசி;அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி, சின்ன கருணைபாளையத்தை சேர்ந்தவர் அருள்குமார், 37 கடந்த, 11ம் தேதி மனைவியுடன் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வந்து பார்க்கும் போது வீட்டின் முன் கதவை உடைத்த மர்ம ஆசாமிகள், 6 சவரன் நகைள், 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துசென்றது தெரிந்தது.அருள்குமார், அவிநாசி போலீசில் அளித்த புகாரின்பேரில், டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், தனிப்படை போலீசார், திருடர்களை தேடி வந்தனர். அதில், முத்துசெட்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்த துாத்துக்குடி மாவட்டம், கொங்கராயன் குறிச்சியை சேர்ந்த நடராஜன் மகன் அருள்ராஜா 27, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பிரகாஷ் 36, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை