உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மன வளக்கலை மன்றங்களில் தியானத்தில் மூழ்கிய மக்கள்

மன வளக்கலை மன்றங்களில் தியானத்தில் மூழ்கிய மக்கள்

திருப்பூர் : உலக தியான தினத்தையொட்டி, உலக சேவா சங்கம் திருப்பூர் மண்டலம் சார்பில், அனைத்து மனவளக்கலை மன்றங்கள் மற்றும் அறக்கட்டளைகளில், தியான பயிற்சி நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அமைதியான சூழலில் குழுத் தியானம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் ஆழ்ந்த மன அமைதியையும் ஆன்மிக எழுச்சியையும் அனுபவித்ததாக தெரிவித்தனர். மனித நேயம், அன்பு, பொறுமை மற்றும் சமாதானம் போன்ற உயரிய பண்புகளை வளர்க்க தியானம் துணைபுரிகிறது; தியானத்தை தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. --- 15, வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவிலில், சிறப்பு தியானம் நடந்தது. 'ஹார்ட்புல்னெஸ்' தியானம் 15 ஆயிரம் பேர் பங்கேற்பு 'ஹார்ட்புல்னெஸ்' அமைப்பு சார்பில் நடந்த ஆன்லைன் தியான நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஆன்லைன் தியானப் பயிற்சிக்கு உலகம் முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டது. தலைமையகமான ைஹதராபாத், 'கன்ஹா சாந்தி வனம்' ஆசிரமத்தில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முதன்மை விருந்தினராக பங்கேற்று, உலக தியான தின நிகழ்வை துவங்கி வைத்தார். ஆன்லைன் வழியாக, மொத்தம், 160 -நாடுகளிலிருந்து, 3,57,335 பேர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆன்லைன் வழியாக நடந்த அதிக எண்ணிக்கையிலானோர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியாக, கின்னஸ் பதிவுக்கு இந்த நிகழ்ச்சி ஏற்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி