உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது

திருப்பூர்;நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெருந்தொழுவு ரோடு பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அதில், சந்தேகப்படும் விதமான நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சைமன் ராஜ், 26 என்பது தெரிந்தது. விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.l திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மத்திய பஸ் ஸ்டாண்டில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்டனர். போலீசாரை கண்டதும், இருவர் தப்பியோட முயன் றனர். அதில், ஒருவரை பிடித்து விசாரித்தனர்.திருவாரூர், மன்னார்குடியை சேர்ந்த ஐயப்பன், 27 என்பதும், தப்பியோடிய நண்பர் குணாவுடன் கடந்த வாரம் ஆந்திராவுக்கு சென்று, விற்பனைக்காக கஞ்சா பொட்டலம், ஒரு கிலோவை வாங்கி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி