உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / "கட்சிகளுடன் சண்டைக்கு அல்ல; மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன்"- சொல்கிறார் அண்ணாமலை

"கட்சிகளுடன் சண்டைக்கு அல்ல; மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன்"- சொல்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ., கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும். வட அமெரிக்காவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி வரியை நீக்கியதன் மூலம் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் 13 மீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 400 எம்.பிக்களை பெற வேண்டும். 400 எம்.பி.,க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம். அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sureshkumar
மார் 26, 2024 13:51

ANNAMALAI BETTER THAN PRESENT POLITICIANS


Vijaykumar
மார் 26, 2024 12:22

WELL DONE MR ANNAMALAI SIR WE WISH A CLEAN AND TRUE POLITICAL LEADER TO BE IN TAMILNADU LIKE YOU WE ARE PROUD TO VOTE FOR YOU IN COIBATORE MP POST vijayakumar muthusamy


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை