உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் 7 ஆண்டில் 35 ஆயிரம் மாடு மாட்டுச்சந்தையில் விற்பனை

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் 7 ஆண்டில் 35 ஆயிரம் மாடு மாட்டுச்சந்தையில் விற்பனை

திருப்பூர் மாவட்டம், காங்கயம், பழைய கோட்டையில், காங்கேயம் நாட்டு மாடுகளுக்காக மட்டுமே செயல்படும் பிரத்யேக சந்தை கவனம் பெறுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை இயங்கி வரும் இச்சந்தையானது. இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இதுகுறித்து கொங்க கோசாலை நிர்வாகி சிவக்குமார் கூறியதாவது:அடிமாட்டுக்கு செல்லாமல் பாரம்பரிய காங்கேயம் இனம் காளைகளை காக்க, கொங்க கோசாலை உருவாக்கப்பட்டது. பின், கடந்த, 2016ம் ஆண்டு, ராஜ்குமார் மன்றாடியார் உடன் இணைந்து, மாட்டு சந்தையை ஆரம்பித்தோம். காங்கேயம் இன மாட்டின் பிறப்பிடமே பழையகோட்டை தான். கடந்த, ஏழு ஆண்டுகளில் மட்டும் இந்த சந்தையின் மூலம், 35 ஆயிரத்துக்கும் அதிகமான காங்கேயம் இனமாடுகள் வளர்ப்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் நடக்கும் சந்தை இடைத்தரகர் இன்றி நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வந்து, வாங்கி சென்று வளர்த்து வருகின்றனர். இந்த சந்தை மூலமாக காங்கேயம் இனமாடுகள் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ