உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 45 நாள் பேமென்ட் நடைமுறை; சிறு நிறுவனங்களுக்கு நன்மை

45 நாள் பேமென்ட் நடைமுறை; சிறு நிறுவனங்களுக்கு நன்மை

திருப்பூர்:''45 நாள் பேமென்ட் நடைமுறை, குறு, சிறு நிறுவனங்களுக்கு நன்மை விளைவிக்கும்'' என்று கருத்தரங்கில் தெரிவிக் கப்பட்டது.அகில இந்திய பட்டய கணக்காளர் நிறுவன திருப்பூர் கிளை மற்றும் திருப்பூர் உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கம் (டிக்மா) இணைந்து, பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஐ., பவனில் கருத்தரங்கு நடத்தின.இதில், சமீபத்தில் வருமான வரி சட்டப்பிரிவு, 43 பி(சி)ன் படி, புதியதாக கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் குறித்தும், அதற்கேற்ப தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. கருத்தரங்கை, துணை மேயர் பாலசுப்ரமணியம், துவக்கி வைத்தார்.ஆடிட்டர் பிரபு செந்தில் பேசுகையில், ''குறு மற்றும் சிறு நிறுவனங்களிடம் பெறும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு, 15 நாட்கள் முதல், 45 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் மட்டுமே, அதனை செலவு செய்த ஆண்டின் செலவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இது, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு, விற்பனை தொகையை பெறுவதில் உள்ள நடைமுறையை எளிதாக்கும். அதே சமயம், பணம் செலுத்தும் நிறுவனங்களின் நடைமுறை மூலதனத்தின் தேவை அதிகமாகும்,'' என்றார்.பட்டய கணக்காளர் சங்க தலைவர் சரவணராஜா, டிக்மா செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன், தொழில் துறையினர், ஆடிட்டர்கள் பங்கேற்றனர். ஆடிட்டர் சங்க செயலாளர் தருண், நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ