உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணை தாக்கியவருக்கு 6 மாதம் சிறை தண்டனை

பெண்ணை தாக்கியவருக்கு 6 மாதம் சிறை தண்டனை

திருப்பூர்;திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்த சிறுமி, அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் சென்றார்.அதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் அலி, 28 என்பவர், கிண்டல் செய்து, கன்னத்தில் அறைந்தார். இதனை தட்டி கேட்ட சிறுமியின் அக்காவையும் தாக்கினார்.புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் அப்பாஸ் அலியை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணையில், திருப்பூர் கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதி சுகந்தி, குற்றவாளிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை