மேலும் செய்திகள்
போலீஸ் லைன் மாரியம்மன் பஞ்சுதிரி அம்மனாக அவதாரம்
26-Jul-2025
அவிநாசி; அவிநாசி அருகே பனியன் நிறுவன வேன் மீது, லாரி மோதியதில், ஏழு பேர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு அவிநாசியில் இருந்து, பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான வேன், ஊழியர்களுடன் கருவலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது. வெள்ளியம்பாளையம் பகுதியை தாண்டி சென்றபோது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி பனியன் நிறுவன வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த ஊழியர்கள், லாரி மற்றும் வேன் டிரைவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவிநாசி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
26-Jul-2025