உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 750 பக்தர்கள் அயோத்தி பயணம்; பா.ஜ., ஏற்பாடு பா.ஜ., ஏற்பாடு

750 பக்தர்கள் அயோத்தி பயணம்; பா.ஜ., ஏற்பாடு பா.ஜ., ஏற்பாடு

திருப்பூர்:பா.ஜ., ஏற்பாட்டில் சிறப்பு ரயிலில் திருப்பூரிலிருந்து பக்தர்கள் அயோத்தி புறப்பட்டுச் சென்றனர்.உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் குழந்தை ராமர் கோவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது.இக்கோவிலில் தினமும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., அயோத்தி செல்ல விரும்பும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு ரயிலில் அவர்கள் சென்று வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.அவ்வகையில், திருப்பூரிலிருந்து நேற்று இரவு 9:30 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது. இதில் 888 பேர் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூரிலிருந்து 550 பேர், தாராபுரம், காங்கயம் பகுதியிலிருந்து 200 பேர் என மொத்தம் 750 பேர் நேற்று புறப்பட்டனர்.மேலும் ஈரோட்டிலிருந்தும் சிலர் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ரயில் வரும் 13ம் தேதி அயோத்தி சென்று சேரும்.திருப்பூரிலிருந்து அயோத்தி செல்லும் பக்தர்களை பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் வழியனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை