உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 8 மண்டபத்தில் அன்னதானம்

8 மண்டபத்தில் அன்னதானம்

அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எட்டு திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை, 9:15 மணி முதல், 10:15 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி, நாளை பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்க பல அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.அவ்வகையில், அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில், மேற்கு ரத வீதியில் உள்ள பூவாசாமி கவுண்டர் நினைவு திருமண மண்டபம் மற்றும் குலாலர் அறக்கட்டளை சார்பில், குலாலர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவை தவிர, தேவாங்கர் திருமண மண்டபம், செங்குந்தர் திருமண மண்டபம், தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபம், கங்கவர் திருமண மண்டபம், கோ வம்சத்தார் மற்றும் பனிரண்டர் திருமண மண்டபம் என, எட்டு திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு, நாளை காலை, 8:00 முதல், மாலை, 6:00 மணி வரை அன்னதானம் வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை