| ADDED : டிச 01, 2025 05:02 AM
உடுமலை: குமரலிங்கம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உடுமலை அருகே குமரலிங்கம், அமராவதி ஆற்றங்கரையில், பழமை வாய்ந்த விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் தத்தாத்ரேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், உபயதாரர்கள், கிராம மக்கள் மற்றும் காசி விஸ்வநாதர் அறப்பணி அறக்கட்டளை சார்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிேஷக விழா, நவ., 25ல், துவங்கியது. ஆறு கால யாக வேள்விக்குப்பிறகு, நேற்று காலை, 6:30 மணிக்கு மேல், விசாலாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் தத்தாத்ரேய சுவாமிகளுக்கு, மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிேஷகத்தையும், சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த சுவாமிகளையும் தரிசனம் செய்தனர்.