வீணாகும் தண்ணீர்திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம், புற நோயாளிகள் பிரிவு எதிரே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- அஸ்லாம், தாராபுரம் ரோடு.திருப்பூர், பெரிய கடைவீதி, பழனியம்மாள் ஸ்கூல் சந்திப்பு வீதி முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு வாரமாக வீணாகிறது. மாநகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.- ஜாபர்கான், பெரிய கடை வீதி.திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் ஸ்டாப் அடுத்த மும்மூர்த்தி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- கவிப்பிரியன், போயம்பாளையம்.கழிவுநீரால் அவதிதிருப்பூர், செட்டிபாளையம், ஐஸ்வர்யா நகர், கவுதம் கிராண்ட் குடியிருப்பு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- தேவராஜ், ஐஸ்வர்யா நகர்.எரியாத விளக்குதிருப்பூர், பாரப்பாளையம், தனலட்சுமி லே-அவுட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. மின்கம்பங்கள் காட்சி பொருளாக உள்ளன.- ரீட்டா தேவி, பாரப்பாளையம்.மின்சாரம் வீண்திருப்பூர், பி.என்., ரோடு, கணக்கம்பாளையம் பிரிவில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் அடிக்கடி வீணாகிறது.- நமச்சிவாயகுமார், கணக்கம்பாளையம் பிரிவு.வீணாகும் தண்ணீர்திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு - கருமாரம்பாளையம் ஸ்டாப் இடையே குழாய் உடைந்த தண்ணீர், 15 நாட்களாக சாலையில் வீணாகிறது. சாலை சேதமாகி வருகிறது.- கோகுலகண்ணன், பாளையக்காடு.வீதியெங்கும் இருள்திருப்பூர், 32வது வார்டு பண்டிட் நகர் ஸ்கூல் வீதியில் தெரு விளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.- வித்யசாகர், பண்டிட் நகர்.திருப்பூர், கோல்டன் நகர் மெயின் ரோடு, சூர்யா காலனி சந்திப்பு சாலையில், தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- ஆஷிப்கான், கோல்டன் நகர்.படர்ந்த செடிகள்திருப்பூர், போயம் பாளையம் வடக்கு, குருவாயூரப்பன் நகர், ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் மின்கம்பம் முழுதும், செடிகள் படர துவங்கியுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசன், முருகம்பாளையம்.குப்பை அள்ளுங்க...திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே தேங்கியுள்ள குப்பை அள்ள வேண்டும். இந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- விஜி, குளத்துப்பாளையம்.தண்ணீர் வீண்திருப்பூர், கருமாரம்பாளையம் வடக்கு, ஏ.டி., காலனியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.- திருமுருகன், கருமாரம்பாளையம்.தொட்டியால் இடையூறுதிருப்பூர், குமார் நகர் சிக்னல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக குப்பை தொட்டி உள்ளது. தொட்டியை இடமாற்ற வேண்டும்.- லோகு, குமார் நகர்.கால்வாய் அடைப்புதிருப்பூர் - அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.- சரவணன், புஷ்பா ஸ்டாப்.திருப்பூர், 20வது வார்டு, இளங்கோ நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் அப்படியே, குப்பைகளுடன், தேங்கியுள்ளது.- ரஞ்சித்குமார், இளங்கோ நகர்.