உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் சமபந்தி விருந்து பொதுமக்கள் வாக்குவாதம்

பள்ளியில் சமபந்தி விருந்து பொதுமக்கள் வாக்குவாதம்

அவிநாசி:அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே உள்ள திருமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.கடந்த, 2018ல் சமையலர் பாப்பாள் சமைத்த சத்துணவை, குழந்தைகள் சாப்பிடக்கூடாது என பெற்றோர் தடுத்தது குறித்து தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.இதன் விசாரணை, 3ம் தேதி நடைபெற்ற போது, 'திருமலைக்கவுண்டம்பாளையத்தில் நடந்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எனவே, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார், பள்ளி குழந்தைகள், பெற்றோர், பொதுமக்கள் என ஒன்றிணைந்து சமையலர் பாப்பாள் சமைக்கும் உணவை, சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டு சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்,' என வழக்கின் ஒரு பகுதியாக மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் வலியுறுத்தினார்.அதன்படி நேற்று பள்ளியில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாசில்தார் மோகனன், பி.டி.ஓ. ரமேஷ், டி.எஸ்.பி. பவுல்ராஜ், இன்ஸ்பெக் டர் ராஜவேல், வக்கீல் மோகன், தலித் அமைப்பினர், பெற்றோர் பங்கேற்றனர்.ஆனால், வெளியாட்களை அழைத்து வந்து சமைத்ததாக தலித் அமைப்பினர் குற்றம்சாட்டி, அதிகாரிகளுடன், சிலர் வாக்குவாதம் செய்தனர். அதனை தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதன் முடிவில், 'மீண்டும் ஒரு நாள் சமபந்தி விருந்து நடத்தப்படும் எனவும், அன்றைய தினம், சமையலர் பாப்பாள் மட்டுமே சமையல் செய்வார்,' என அறிவிக்கப்பட்டது. இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ