உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூலிப்படை மூலம் தாய்மாமன் கொலை: ஒரு வாரத்துக்கு பின் சடலம் மீட்பு

கூலிப்படை மூலம் தாய்மாமன் கொலை: ஒரு வாரத்துக்கு பின் சடலம் மீட்பு

திருப்பூர்:சொத்து பிரச்னை தொடர்பாக, கூலிப்படைக்கு, 5 லட்சம் ரூபாய் கொடுத்து தாய்மாமனை கடத்தி கொன்ற வழக்கில், மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஒரு வாரத்துக்கு பின் நொய்யல் ஆற்றில் சடலம் மீட்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், காளிவலசை சேர்ந்தவர் சோமசுந்தரம், 80; விவசாயி. மனைவி, இரு மகன்கள் உடன் வசித்து வந்தார். கடந்த, 26ம் தேதி மகனுக்கு பெண் பார்க்கலாம் என்று பழனிசாமி என்பவர் சோமசுந்தரத்தை அழைத்து சென்றார். பின், மொபைல் போன் சுவீட்ச் ஆப் ஆனாது. புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரித்தனர்.தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், முதியவர் மாயமானது தொடர்பாக தங்கை மகன் குடும்பத்தினரிடம் விசாரித்த போது, சொத்து பிரச்னை தொடர்பாக கூலிப்படைக்கு, 5 லட்சம் ரூபாய் கொடுத்து சோமசுந்தரத்தை கொலை செய்து, திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள ஆற்றில் வீசியது தெரிந்தது.இதுதொடர்பாக, சோமசுந்தரத்தின் தங்கை மகன் கொற்றவேல், 57, அவரின் மனைவி விசாலாட்சி, 44, கூலிப்படையை சேர்ந்த ஈரோடு, வடபழனி சிதம்பரம், 38, அவரது மகன், 15 வயது சிறுவன், முருகேசன், 64, மனைவி விஜயா, 57 என, ஆறு பேரை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.கடந்த சில நாட்களாக நொய்யல் ஆற்றில் சடலத்தை தேடும் பணி நடந்தது. தொடர்ந்து, தலைமறைவான பழனிசாமியை போலீசார் தேடி வந்தனர்.ஒரு வாரத்துக்கு பின், நொய்யல் ஆற்றில் கொல்லன் வலசு அருகே சோமசுந்தரத்தின் சடலம் காங்கயம் தீயணைப்பு துறையினர் உதவியோடு மீட்டனர். தலைமறைவாக இருந்த, பழனிசாமி, 58 என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை