உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகஷியா என்கிளேவ் புதிய வீட்டுமனை உதயம்

அகஷியா என்கிளேவ் புதிய வீட்டுமனை உதயம்

திருப்பூர்:திருப்பூர் - காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள அகஷியா என்கிளேவ் புதிய வீட்டுமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் சேர்மன் மோகன் கார்த்திக் வீட்டுமனைகளை திறந்து வைத்தார். செந்தில் மெடிக்கல்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அகஷியா என்கிளேவ் உரிமையாளர் பத்மநாபன் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சியில், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில், 1.5 ஏக்கர் பரப்பளவில் அகஷியா என்கிளேவ் அமைந்துள்ளது. 10 முதல் 12 சென்ட் வரையுள்ள, மொத்தம், 8 மனைப்பிரிவு மட்டுமே உள்ளன. பிரமாண்டமான நுழைவாயில், தார் சாலை, சூரியஒளி மின்விளக்கு, சாக்கடை கால்வாய் வசதி, சுற்றுச்சுவர் உட்பட 30க்கும் மேற்பட்ட வசதிகளுடன், கேட்டட் கம்யூனிட்டி மனையிடங்கள் உள்ளன.டி.டி.சி.பி., அனுமதி, திருப்பூர் மாநகராட்சியின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 80 சதவீதம் வரை வங்கி கடன் பெற்றுத்தரப்படுகிறது. எல்லாவகையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மனை வாங்குவோர், உடனடியாக வீடுகட்டி குடியேறலாம். விவரங்களுக்கு, 96004 16004 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ