உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நலத்திட்ட உதவிகள் கவர்கிறது அ.தி.மு.க.,

நலத்திட்ட உதவிகள் கவர்கிறது அ.தி.மு.க.,

கடந்த, 2011 முதல், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை, நலத்திட்ட உதவி வழங்கி அ.தி.மு.க.,வினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தற்போது, லோக்சபா தேர்தல் நெருங்குவதால், இந்தாண்டு நலத்திட்ட உதவி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகளிலும், 7,600 நபர்களுக்கு, சேலை, சமையல் பாத்திரம் உள்ளிட்ட நல உதவி வழங்கி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் வாக்காளர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகின்றனர்.அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், 24ம் தேதி தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரிசிக்கடை வீதியிலும், 27ம் தேதி, காங்கயத்திலும், முன்னாள் முதல்வர் ஜெ., வின், 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.வரும், 25ம் தேதி, தலைமை நிலைய செயலாளர் வேலுமணி தலைமையில், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட, அங்கேரிபாளையத்திலும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்கள், மணிமேகலை, ஜெயசீலன், கோவை புரட்சித்தம்பி, குன்னத்துார் கோவிந்தராஜ், எழுமலை, கோபி ஆகியோர் பொதுக்கூட்டங்களில் பேச உள்ளனர்.தற்போது தெருமுனைப் பிரசாரக்கூட்டங்கள் நடக்கின்றன. இதில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன், 'ஆளும் கட்சியான தி.மு.க.,வினரின் மோசமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்ட, மக்களைச் சந்திக்க தெருமுனைக்கு வந்திருக்கிறோம்' என்று விளாசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை