உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அ.தி.மு.க. நிர்வாகி ரயில் மோதி பலி

 அ.தி.மு.க. நிர்வாகி ரயில் மோதி பலி

திருப்பூர்: திருப்பூர், சந்திராபுரம், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 54. அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர், கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் இயக்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டுள்ளார். அதில், எதிர்பாராத விதமாக ரயில் மோதி, அதே இடத்தில் பலியானார். எஸ்.ஐ. லோகநாதன் தலைமையிலான ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை