உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் 28ம் தேதி அண்ணாமலை  பாதயாத்திரை

திருப்பூரில் 28ம் தேதி அண்ணாமலை  பாதயாத்திரை

திருப்பூர் : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண்... என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மூலம் மக்களைச் சந்தித்து வருகிறார். அவ்வகையில், இந்த பாத யாத்திரை நிகழ்ச்சி சட்டசபை தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சி, திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு சட்டசபை தொகுதிகளில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. ஒரே நாளில் இரு தொகுதிகளிலும் முக்கியப் பகுதிகள் வழியாக பாத யாத்திரையில், அண்ணாமலை பொதுமக்களைச் சந்தித்து பேசுகிறார். அதன் பின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாத யாத்திரை நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள், கட்சி நிர்வாகிகளுக்கான குழுக்கள், பாயாத்திரை மேற்கொள்ளும் வழி குறித்து இதில் விரிவான ஆலோசனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை