உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வார்ஷிக ஆராதனை; சதுர்வேத பாராயணம்

வார்ஷிக ஆராதனை; சதுர்வேத பாராயணம்

திருப்பூர்:ஸ்ரீமஹா பெரியவர் 30வது வார்ஷிக ஆராதனையை முன்னிட்டு, சதுர்வேத பாராயணம் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர், ஓடக்காட்டில் உள்ள ஸ்ரீகாஞ்சி மடத்தின் கிளை மற்றும் ராமகிருஷ்ணர் பஜனை மடம் இயங்கி வருகிறது. ஸ்ரீமகா பெரியவர் முக்தி அடைந்த தினத்தையொட்டி, 30வது வார்ஷிக ஆராதனை நிகழ்ச்சியில், நேற்று சதுர்வேத பாராயணம் செய்யப்பட்டது.காலை, 8:00 மணிக்கு, சிறப்பு வழிபாடும் மகா தீபாராதனையும் நடந்தது. மகா பெரியவரின் பாதுகைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, திருப்பூர் ப்ரஹ்ம ஸ்ரீநாராயணன் வாத்தியார், உள்ளூர் வைதிகாள் மற்றும் கணியூர் பாடசாலை வித்யார்த்திகள் முன்னிலையில், சதுர்வேத பாராயணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை