| ADDED : பிப் 17, 2024 01:30 AM
திருப்பூர்;திருப்பூரில் இன்று புதிதாக துவங்கவுள்ள மோட்டார் வாகனவிபத்து இன்சூரன்ஸ் வழக்கு சிறப்பு கோர்ட் டுக்கு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகள் விசாரிக்கும் வகையில், சிறப்பு கோர்ட் ஒன்று செயல்படுகிறது.அதிகரித்து வரும் வழக்குகள் எண்ணிக்கையைத் தொடர்ந்து கூடுதலாக, மற்றொரு சிறப்பு மாவட்ட கோர்ட் அமைக்க உத்தரவிடப்பட்டது.அவ்வகையில், இதற்கான சிறப்பு கோர்ட் இன்று துவங்கப்படுகிறது. இப்புதிய கோர்ட்டுக்கு நீதிபதியாக, பாலு நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த அவர் அங்கிருந்து இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை ஐகோர்ட் பதிவாளர் ஜோதிராமன் பிறப்பித்துள்ளார்.