உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை பராமரிப்பில் கவனம்: டாக்டர்கள் அறிவுறுத்தல்

கால்நடை பராமரிப்பில் கவனம்: டாக்டர்கள் அறிவுறுத்தல்

உடுமலை: 'நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், கால்நடைகளுக்கு அதிக காற்றோட்டம் உள்ள இடங்கள் அவசியம்,' என, கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் பலர், பால் உற்பத்திக்காக, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சமீப நாட்களாக, பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், விவசாயிகள், அதிக இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இனிவரும் நாட்களில், கடும் வெயில் நிலவினால், கறவை மாடுகளில், பால் உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, கால்நடைகள் பராமரிப்பு முறைகளில் மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:வெயில் காரணமாக, கால்நடைகளில், சினை பிடித்தலும், 20 சதம் முதல், 30 சதவீதம் வரை பாதிக்கும். உணவு உட்கொள்ளுதல் பாதியாக குறைந்து, கால்நடைகள் அதிகமாக தண்ணீர் பருகும். கோடையில், கால்நடைகளுக்கு அதிக காற்றோட்டம் உள்ள இடங்கள் அவசியம். கொட்டகைக்குள் சூரிய ஒளி படாதவாறு இடம் அமைக்க வேண்டும். கொட்டகையின் கூரையை, தென்னங்கீற்று, பனை ஓலை போன்றவற்றைக்கொண்டு அமைக்கலாம்.கால்நடைகளை குளிப்பாட்டுதல் வேண்டும். தவிர, கொட்டகையின் மீது நீர்த்தெளிப்பான் அமைப்பது வாயிலாக, வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம். இதனால், கால்நடைகளுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்