உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி எரிவாயு மயானம்; பயன்பாட்டுக்கு வருகிறது

அவிநாசி எரிவாயு மயானம்; பயன்பாட்டுக்கு வருகிறது

அவிநாசி;பராமரிப்புக்கு பின் அவிநாசி பேரூராட்சி எரிவாயு மயானம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.இதுகுறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி கூறியதாவது:பேரூராட்சி எரிவாயு மயானத்தில் புகை போக்கி, புளோயர், மின் மோட்டார், தகன மேடை உள்ளிட்ட மேற்கண்ட பராமரிப்பு பணிகளுக்காக கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களை எரியுட்டும் காரியங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தற்போது, அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இன்று (12ம் தேதி) முதல் மயானம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. நேர கால அட்டவணை மாற்றப்பட்டு காலை, 7:00 முதல் மாலை, 7:00 மணி வரை இறந்தவர்களை எரியூட்டும் பணிகள் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை