உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவிகளுக்கு விழிப்புணர்வு

மாணவிகளுக்கு விழிப்புணர்வு

அவிநாசி வட்டார, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில், அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், மாணவியர் மத்தியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கல்லுாரி முதல்வர் முதல்வர் நளதம் முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சரஸ்வதி, பேசினார். வளரிளம் பருவத்தில், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் பாதிப்பு, அதை தவிர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் என, பலரும் பங்கேற்றனர். அதே போன்று, தெக்கலுார், அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 100 மாணவிகளுக்கு, விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ