உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு

தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு

உடுமலை:தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, உடுமலையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலையில், தேர்தல் கமிஷன், வித்யாசாகர் கல்லுாரி, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மற்றும் சமூகப்பணித்துறை, ஆங்கிலத்துறை சார்பில், தேசிய வாக்காளர் தினம் மற்றும் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.கல்லுாரி செயலர் பத்மாவதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சையது ராபியம்மாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தேசிய வாக்காளர் தினம் மற்றும் சாலை பாதுகாப்பு வார விழா குறிதத்தும், தேர்தலின் போது, மாணவர்கள் தங்களது ஓட்டுரிமையை சரியாகப் பயன்படுத்த வேண்டும், என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை