உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு :இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை

 பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு :இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை

திருப்பூர்: சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான, முதல்கட்ட பேச்சுவார்த்தை, இன்று நடக்கிறது. திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்கப்படுகிறது. கடந்த, 2021ம் ஆண்டு, 32 சதவீத சம்பள உயர்வுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அது, கடந்த செப். மாதத்துடன் முடிவடைந்தது. தொழிற்சங்கங்கள், கூட்டுக்குழு அமைத்து, இது தொடர்பான பொது கோரிக்கையை முன்வைத்தது. அதனை தொடர்ந்து, உற்பத்தியாளர்களும் கூட்டுக்குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு தயாராகினர். அதன்படி, இன்று மாலை, 4:30 மணிக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட பேச்சு வார்த்தை துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ