உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறந்த திருநங்கை விருது

சிறந்த திருநங்கை விருது

திருப்பூர் : திருநங்கைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள வரும் ஏப்., 15ம் தேதி, சிறந்த திருநங்கைக்கான விருதை, தமிழக முதல்வர் வழங்குகிறார்.இவ்விருது பெறும் திருநங்கைக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கப்பட உள்ளது. திருநங்கைகள், அரசு உதவி பெறாமல், வாழ்க்கையில் சுயமாக முன்னேறியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகளுக்காகவது, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. தகுதியுள்ள திருநங்கைகள், உரிய ஆவணங்களுடன், https://award.tn.gov.inஎன்கிற இணையதளத்தில், வரும் 31 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை