உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 207 சக்தி கேந்திரங்கள் ஈர்க்கிறது பாரதிய ஜனதா

207 சக்தி கேந்திரங்கள் ஈர்க்கிறது பாரதிய ஜனதா

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வுக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் உள்ள, ஆயிரத்து, 33 பூத்களில் உறுப்பினர்களை சேர்க்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.'பூத்' வலுவாக இருக்கும் பட்சத்தில், குடியிருப்பு பகுதியில் ஓட்டு சேகரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள எளிமையாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு பகுதியிலும், மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்களாக உள்ள நபர்களை, உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.ஒரு கேந்திரத்துக்கு, ஐந்து பூத்கள் என பிரித்து, 207 சக்தி கேந்திரங்களை உருவாக்கி உள்ளனர். இவர்களுக்கு, இளம் வாக்காளர், மக்களை சந்தித்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தெரிவிக்கும் பிரதான பணியாக வழங்கப்பட்டுள்ளது.அன்றாடம் காலை, மாலை நேரங்களில் கூட்டங்களை நடத்தி, வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுதவிர, லோக்சபா தொகுதி, சட்டசபை தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும், 33 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு, தனியார் கல்லுாரிகள் முன்பு உறுப்பினர்கள் சேர்க்கை பணியை செய்து வருகின்றனர். கல்லுாரி மாணவர்கள் மத்தியில், மாநில தலைவர் அண்ணாமலைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், பலரும் கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.பிரதமர் மோடி வருகை, பாதயாத்திரை நிறைவு போன்றவை முடிந்த பின், முழு வீச்சில் பொறுப்பாளர்கள் தேர்தல் களப்பணியாற்ற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை