உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேன்சர் சிகிச்சை மையம்  திருப்பூரில் இன்று பூமி பூஜை

கேன்சர் சிகிச்சை மையம்  திருப்பூரில் இன்று பூமி பூஜை

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனை வளாகத்தில், கேன்சர் சிகிச்சை மையத்திற்கான பூமி பூஜை, இன்று (10ம் தேதி) நடத்தப்பட உள்ளது.ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர். முருகநாதன் கூறியதாவது;திருப்பூரில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்ட, மாநில மக்கள், இடம் பெயர்ந்து வந்து தொழில் செய்கின்றனர். இதனால், கேன்சர் நோய் என்பது பரவலாக உள்ளது. இங்கு அமையவுள்ள கேன்சர் சிகிச்சை மையத்தில் பொருத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் சிகிச்சை வாயிலாக, கேன்சர் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்ட றிந்து விட்டால், குணமாக் கிவிட முடியும்.அரசுக்கு பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கப்பட வேண்டிய, 30 கோடி ரூபாயில் இதுவரை, 17 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது; நன்கொடை வழங்க விரும்புவோர் வழங்கலாம். கட்டுமானப்பணி முடிவதற்குள், நவீன உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு விடும்.பங்களிப்பு தொகை வழங்க விரும்புவோர், 98422 -31329, 98430- 60666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர். சுரேஷ் குமார், புற்றுநோயாளிகளுக்கு தொடர் மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன், சிகிச்சையும் வழங்கி வருகிறார். அந்த வகையில், புற்றுநோய்க்கான மருத்துவம் துவங்கி விட்டது என்றே சொல்லலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.எல்.ஏ., செல்வராஜ், கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை