உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா சாக்லேட் விற்பனை: பீஹார் வாலிபர் பிடிபட்டார்

கஞ்சா சாக்லேட் விற்பனை: பீஹார் வாலிபர் பிடிபட்டார்

அவிநாசி:அவிநாசியில் உள்ள கடைகளுக்கு கஞ்சா சாக்லேட் சப்ளை செய்யப்படுவதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில், போலீசார் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பெரிய தோல் பையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பீகாரை சேர்ந்த பிந்து குமார் ராய், 36, என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததில் பையை சோதனை செய்ததில், இரண்டு கிலோ கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி