உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கிராம இணைப்பு சாலையில் ஆபத்தான நிலையில் பாலம்

 கிராம இணைப்பு சாலையில் ஆபத்தான நிலையில் பாலம்

உடுமலை: உடுமலை அருகே, கிராம இணைப்புச்சாலை குறுகலாக உள்ளதோடு, கால்வாய் பாலமும் உடையும் நிலையில் உள்ளது. உடுமலையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், சடையப்பகவுண்டன் புதுார் வழியாக, ஆனைமலை ரோட்டை இணைக்கும் கிராமச்சாலை உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக பராமரிக்காமல், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த வழித்தடத்தில்,தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளது. ரோடு குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதே போல், இந்த ரோட்டில் பி.ஏ.பி., கால்வாய் பகுதியில், 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலம், சிதிலமடைந்து எந்நேரமும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், கன ரக வாகனங்கள் செல்ல முடியாமல், பல கி.மீ., துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, பி.ஏ.பி., கால்வாய் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை புதுப்பிக்கவும், வாகன போக்குவரத்திற்கு ஏற்ப, ரோடு மற்றும் பாலத்தை அகலப்படுத்தவும் வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ