உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர் மோதி எருமை பலி

டூவீலர் மோதி எருமை பலி

திருப்பூர்; தாராபுரம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் மாரியாத்தாள், 50. நேற்று மாலை எருமையை மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். தாராபுரம் - திருப்பூர் பைபாஸ் ரோட்டில் எருமையுடன் சென்று கொண்டிருந்த மாரியாத்தாள், ரோட்டை கடக்க முயன்றார். அவ்வழியாக அதிவேகமாக டூவீலரில் வந்த, இருவர் எருமை மீது மோதினர். கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு எருமை துடிதுடிக்க இறந்தது. டூவீலரில் வந்த ஸ்ரீபதி, 18, சேதுபதி, 25 என, இருவர் காயமடைந்தனர். மதுபோதையில் இருந்தது தெரிந்தது. காயமடைந்த, இருவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி