உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய அரசு நலத்திட்டம்: பொதுமக்கள் பதிவு

மத்திய அரசு நலத்திட்டம்: பொதுமக்கள் பதிவு

அவிநாசி:அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி பெரிய நாதம்பாளையத்தில் மத்திய அரசின் சார்பில் விகிஸ்த பாரத் சங்கல்ப மக்கள் நலத்திட்ட முகாம் நடந்தது.செம்பியநல்லுார் ஊராட்சி தலைவர் சுதா கலந்து கொண்டு மக்கள் நலத்திட்டம் பற்றி கூறினார். அவிநாசி மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கருணாநிதி தலைமையில், ஒன்றிய உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் சரவணகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபு, ஊராட்சி பொறுப்பாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை தலைவர் செந்தில் நன்றி கூறினார்.இருநுாறுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு அரசின் திட்டத்தில் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !