உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனிக்கால குளிரை தொடர்ந்து மிதமான மழைக்கு வாய்ப்பு

பனிக்கால குளிரை தொடர்ந்து மிதமான மழைக்கு வாய்ப்பு

உடுமலை:உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பனிக்கால குளிரை மக்கள் அதிகளவில் உணர்கின்றனர்.தமிழ்நாடு வேளா ண்மை பல்கலை மற்றும் இந்திய வானிலைத்துறை, கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் வரும் வாரம், அதிகபட்சம், 26 முதல், 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை, 21 முதல், 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் மட்டுமே இருக்கும்.காற்றில் கலந்துள்ள ஈரப்பதம், காலை நேரத்தில், 90 சதவீதமாகவும், மாலையில், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு, 10 முதல், 12 கி.மீ., வேகத்தில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.வரும் நாட்களில், மேற்கு மண்டல பகுதிகளில், 6 முதல், 12 கி.மீ., வேகத்துக்கு லேசான காற்றுடன், மிதமான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மண்ணின் ஈரத்தை பொறுத்து நீர் பாசனத்தை ஒத்தி வைக்கலாம்.அறுவடை நிலையில் உள்ள பயிர்களில், போதிய வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும். குறைந்தபட்ச வெப்பநிலை, 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருப்பதால், பசுக்களுக்கு தேவையான பசுந்தீவனம் மற்றும் கலப்பு தீவனங்களை வழங்கினால், பால் உற்பத்தி குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !