உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொண்டிபாளையத்தில் 24ம் தேதி தேரோட்டம்

மொண்டிபாளையத்தில் 24ம் தேதி தேரோட்டம்

திருப்பூர்;மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில், 24ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகேயுள்ள மொண்டிபாளையம், பூமாதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா துவங்கி உள்ளது. திருவிழா துவக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று மாலை திக்பாலகர் காப்புக்கட்டும், அன்ன வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது.வரும், 22ம் தேதி, அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம் மற்றும் புஷ்பக விமான புறப்பாடு, 23ம் தேதி யானை வாகனத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது.வரும், 24ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பகல் 11:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 25, 26ம் தேதிகளில் தேரோட்டம், 27ம் தேதி, மகா தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி