உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

திருப்பூர்:குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரி சார்பில், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.கிராமப்புற பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், இலவச தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லுாரி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், கடந்த, 8 ம் தேதி துவங்கிய பயிற்சி நேற்று நிறைவு பெற்றது.விழாவில், கோவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துணை இயக்குனர்கள் ராஜேந்திரன், சபரிகிரி, திட்ட அலுவலர் முனைவர் கண்ணன் ஆகியோர், பயிற்சி முறை, எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசினர். பயிற்சி நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி சான்றிதழுடன், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற அனுபவம் குறித்து, பயனாளிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை