உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவுநீரால் தொடரும் அவதி

கழிவுநீரால் தொடரும் அவதி

திருப்பூர் ரயில்வே ஸ்ேடஷன் எதிரில் மாநகராட்சிக்குச் சொந்தமான குமரன் வணிக வளாகம் உள்ளது. இதில் இரு தளங்களில் வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் ஆகியன இயங்குகின்றன. வளாகத்தின் ஒரு பகுதியில், மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக வெளியேறாமல் அதன் முன்புறத்திலும், குமரன் வணிக வளாக கடைகளுக்குச் செல்லும் வழி மற்றும் கடைகளின் வாயில் முன்பும் தேங்கி நிற்கிறது.அவ்வழியாக கடந்து செல்வதில் சிரமம் நிலவுகிறது. வழியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. அதே போல் அங்குள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்தும் குடிநீர் கசிந்து வீணாகிறது. இந்த தண்ணீரும் வணிக வளாக முன்புறம் தேங்கி நின்று அவதியை ஏற்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி