உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் பார் இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

தனியார் பார் இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

பல்லடம், : பல்லடம் வட்டார பகுதியில் தனியார் மதுபான 'பார்'களே இல்லை என, ஆர்.டி.ஐ., பதில் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:பல்லடம் வட்டார பகுதியில் தனியார் பார்களின் எண்ணிக்கை மற்றும் முகவரி, 'பார்'களில், உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறதா அல்லது பொது மக்களுக்கும் வழங்கப்படுகிறதா, தனியார் பார்களுக்கு, எதன் அடிப்படையில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது என்ற தகவல்களை கேட்டு ஆர்.டி.ஐ.,-ல் விண்ணப்பித்திருந்தேன்.இதற்கு, பல்லடம் வட்டார பகுதியில் தனியார் மதுபான பார்கள் எதுவும் இல்லை. தனியார் பார்களில், உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுகிறது என்ற பதில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல்லடத்தில், 7 தனியார் மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பார்களே இல்லை என்று கூறிவிட்டு, உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுவதாக குழப்பமான பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ