உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்சுகாதார பணி சுத்தமில்லை! அதிகாரிகள் ஆசையால் வீணாகும் வரிப்பணம்

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்சுகாதார பணி சுத்தமில்லை! அதிகாரிகள் ஆசையால் வீணாகும் வரிப்பணம்

உடுமலை:உடுமலை நகராட்சி பகுதிகளில், சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளாததோடு, தேவைக்கு அதிகமாக பொருட்கள் கொள்முதல் செய்து, பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக, கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.உடுமலை நகராட்சியில், 20வது நகர மன்ற கூட்டம் தலைவர் மத்தீன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 109 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:நகரில் துாய்மைப்பணிகள் சரி வர நடப்பதில்லை; வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்கள் வருவதில்லை. வீடுகளுக்கு நேரடியாகச்சென்று வாங்குவதில்லை. குப்பை பல இடங்களில் தேங்கியுள்ளது.அவர்களே, தெருவில் குப்பை போட்டு தீ வைத்து எரித்து வருகின்றனர். நகரம் முழுவதும், குப்பை, கழிவுகள் அள்ளப்படாமல், மிக மோசமான நிலையில் உள்ளது.

கொசு மருந்து என்னாச்சு?

கொசு மருந்து, 3 மாதமாக அடிக்கப்படாமல், நகர் முழுவதும் கொசுத்தொல்லை, அவற்றால் பரவும் நோய் பாதிப்பு என பெரும் பிரச்னையாக உள்ளது.துாய்மைபணியாளர்களுக்கு தேவையான, மண் வெட்டி, கூடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. பிளீச்சிங் பவுடர், தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்யாமல், அதிகளவு கொள்முதல் செய்யப்படுகிறது.3 மாதங்களில், அவை காலாவதியாகி, வீணாகிறது, முறையாக பயன்படுத்துவதில்லை. மக்கும் குப்பையை உரமாக மாற்றும், 3 நுண் உரக்குடில்களில், இ.எம்., கரைசல் பயன்படுத்தாமல், சாணம், தயிர், வெல்லம் கரைசல் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், ஒரு லிட்டர், 1,450 ரூபாய் விலையில், வாங்கப்பட்டு, 6 மாதமாகி, காலாவதியாகியுள்ளது. சுகாதார பிரிவில், இவ்வாறு தேவையற்ற செலவுகளால், மக்கள் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் விரையமாகிறது.தளவாட பொருட்கள் தேவையான அளவு வாங்கவும், முறையாக அவற்றை பயன்படுத்தவும் வேண்டும். புகார் தெரிவிக்க கவுன்சிலர்கள் வந்தாலும், நகர சுகாதார அலுவலர் அலுவலகத்தில் இருப்பதில்லை.துாய்மைப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதால், நிதி வீணாகிறது. எங்கிருந்தோ ஒருவர் வந்து, ஒப்பந்தம் எடுத்து, நமது ஊரில் பணியாளர்களை நியமிப்பதற்கு, நேரடியாகவே நகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெரு விளக்குகள் முறையாக பராமரிப்பதில்லை; மின் பிரிவில் புகார் செய்தாலும், வாகனம் இல்லை, தொழிலாளர்கள் இல்லை என மாதக்கணக்கில் இழுத்தடித்து வருகின்றனர்.குடியரசு தினத்திற்கு, கவுன்சிலர்களுக்கு கூட அழைப்பு இல்லாமல், விழா நடத்தப்பட்டுள்ளது.பொறியியல் பிரிவில், நகர பொறியாளர், உதவி பொறியாளர், ஓவர்சீயர் என ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வளர்ச்சிப்பணிகள் முறையாக நடப்பதில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினர்.

தலைவர்

உடுமலை நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில், 157 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். 250 வீடுகளுக்கு ஒருவர் வீதம், அரசு ஒதுக்கீடு, 125 ஆக உள்ள நிலையில், கூடுதலாகவே உள்ளனர்.நிரந்தர பணியாளர்கள், 75 பேர் உள்ளனர். நான்கு டிவிஷனுக்கும், பிரித்து ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, 8 இலகு ரக வாகனங்கள், 2 டிப்பர், 30 மின்சார குப்பை சேகரிப்பு வாகனங்கள் மற்றும் மூன்று நுண் உரக்குடில், 3 வள மீட்பு மையங்களுக்கு துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பற்றாக்குறை நிலவுவதால், அரசுக்கு கூடுதல் துாய்மைப்பணியாளர்கள் வழங்க வலியுறுத்தப்படும்.

ஆதார் மையத்தில் வசூல் வேட்டை

உடுமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு, தினமும், 25 முதல், 50 பேர் வரை வருகின்றனர், டோக்கன் முறை என, மக்களை பல நாட்கள் அலைகழிக்கின்றனர்.திடீரென மையம் பூட்டப்படுகிறது. அதே போல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு கூடுதலாகவும், ஒவ்வொரு பணிக்கும் மக்களிடம், சட்ட விரோதமாக பணம் வசூலிக்கப்படுகிறது. அலட்சியமாக ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். இது குறித்து நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்படும். கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், உரிய பட்டியல் வைக்க வேண்டும், என விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி