உடுமலை: உடுமலை, கொழுமம் ரோடு ரயில்வே வழித்தடம் பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உடுமலையிலிருந்து, கொழுமம் வழியாக பழநி செல்லும் ரோட்டில், எஸ்.வி., புரம் பகுதியில் ரயில்வே வழித்தடம் உள்ளது. இப்பகுதியில், ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டதால், இரு புறமும் ரோடு தோண்டப்பட்டது. தொடர்ந்து, ரோடு பராமரிப்பு பணி மேற்கொள்ளாத நிலையில், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இரு மாதமாக ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாததால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஏற்கனவே, ரயில்வே கேட் பகுதியில், இரு புறமும் மேடாக உள்ள நிலையில், தண்டவாளம் பகுதியில் இரு புறமும் குழி காணப்படுவதால், தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக, ரயில்வே கேட் பகுதியில், ரயில்வே வழித்தடத்தின் இரு புறமும், ரோடு அமைக்க வேண்டும், என வலியுறுத்தி, ஐக்கிய கம்யூ.,கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மதுரை கோட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.