உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உள்ளாட்சி துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனி சாமி, பூண்டி நகராட்சி கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.'சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர், டிரைவர், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2023, ஏப்., 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு கணக்கிட்டு, நிலுவைத்தொகையுடன் வழங்கவேண்டும்.உள்ளாட்சி துறைகளில் ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடவேண்டும்' என, கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ்நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ