உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை : உடுமலையில் இந்து முன்னணி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரப்பன் தலைமை வகித்தார். உடுமலை நகர செயலாளர் பூரணசந்திரன் வரவேற்றார். நகர பொது செயலாளர் ராமு முன்னிலை வகித்தார்.பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர செயலாளர் பாலாஜி நன்றி தெரிவித்தார்.வால்பாறை: வால்பாறையில் இந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்துமுன்னணி பொதுசெயலாளர் சபரீஸ்வரன் தலைமை வகித்தார்.தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும்,, தீவிரவாதத்தை வேறோடு ஒடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.,மண்டலத்தலைவர் தங்கவேல், இந்து முன்னணி பேச்சாளர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் சுப்பிரணியம், ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ