உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நள்ளிரவில் பரபரப்பு : ரயில்வே கேட்டில் சிக்கிய லாரி

நள்ளிரவில் பரபரப்பு : ரயில்வே கேட்டில் சிக்கிய லாரி

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே கேட் பகுதி தடுப்பு கம்பியில் லாரி மோதியது; கம்பியில் சிக்கிய லாரி, கிரேன் மூலம் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 12.00 மணியளவில், திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் இருந்து முதல் ரயில்வே கேட் வழியாக, லோடு ஏற்றிய ஒரு லாரி, தண்டவாள பகுதியை கடக்க முயன்றது. தண்டவாள பகுதியில் உள்ள தடுப்பு கம்பி மீது லாரி மோதியது; கம்பி உடைந்து விழுந்ததில், முன்புறம் சென்று கொண்டிருந்த டாடா சுமோ கார் சேதமடைந்தது.உடைந்த கம்பியின் வளைந்த பகுதி, லாரியின் முன்பகுதியில் சிக்கியதால் லாரி செல்வது தடைபட்டது; பின்புறமும் லாரி செல்ல முடியாததால் கம்பியில் மோதிய இடத்திலேயே நின்றது. ரயில் வரும் நேரமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து ரயில்வே போலீசார் அங்கு வந்தனர். அப்பகுதிக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லோடுடன் நின்றிருந்த லாரியை தண்டவாள பகுதியில் இருந்து அகற்றி, ஊத்துக்குளி ரோட்டில் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி