உள்ளூர் செய்திகள்

கள் இயக்கம் ஆலோசனை

திருப்பூர் : தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம், ராக்கியாபாளையம் பிரிவில் நடந்தது. மாநில அமைப்பாளர் கதிரேசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி முன்னிலை வகித்தார்.'2011ம் ஆண்டுக்குள் கள்ளுக்கான தடையை நீக்கி அரசு அறிவிக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்தால், சீரான விலையில் மக்கள் பெட்ரோல் வாங்க முடியும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து பெட்ரோல் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.'உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பறிக்கப்பட்ட, ஆரம்பக்கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண் துறைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை