உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / "டாஸ்மாக் கடைகளில் ஆடிட்டர்கள் தணிக்கை

"டாஸ்மாக் கடைகளில் ஆடிட்டர்கள் தணிக்கை

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், ஆடிட்டர்கள் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர். 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் உள்ள மதுபானங்களின் இருப்பு விவரம்; விற்பனையான தொகை இருப்பு; விற்பனை செய்யப்பட்ட சரக்கு விவர பட்டியல் மற்றும் விற்பனை தொடர்பான ஆவணங்களை ஆடிட்டர் தலைமையிலான குழு, தணிக்கையில் ஈடுபட்டது. இரண்டு ஆடிட்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய நான்கு பேர் வீதம் 21 குழுக்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட 106 மதுக்கடைகளில் நேற்று ஆய்வில் ஈடுபட்டது. ஒரு குழுவுக்கு ஐந்து கடைகள் வீதம் ஒதுக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டது. திருப்பூர் ஓம்சக்தி கோவில் ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் (எண்: 1943), ஆடிட்டர்கள் ராஜா, மோகன் ஆகியோர் அடங்கிய குழு, நேற்றிரவு தணிக்கை நடத்தியது. ஆடிட்டர்கள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் தணிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 106 கடைகளில், 21 குழுக்கள் மூலம் தணிக்கை செய்யப்பட்டது; தவறுகள் தெரியவரும் பட்சத்தில், மாவட்ட மேலாளர் மற்றும் மண்டல மேலாளரிடம் புகார் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ