உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் தவிப்பு

விவசாயிகள் தவிப்பு

பல்லடம் : மக்காச்சோளத்துக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்தும், அறுவடைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல்லடம் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பல்லடம் பகுதியில் 6,000 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டது. அவை, ஒரு வாரத்துக்கு முன் அறுவடைக்கு தயாரானது. ஒரு கிலோ மக்காச்சோளத்துக்கு தற்போது ரூ.11 முதல் 11.50 வரை கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் அறுவடையில் களம் இறங்கினர். ஒரே நேரத்தில் விவசாயிகள் பலரும் மக்காச்சோளம் அறுவடையில் களம் இறங்கியதால், விவசாய கூலித்தொழிலாளர்கள் கிடைக்க வில்லை. ஆண்களுக்கு ஒருநாள் கூலியாக ரூ.250, பெண் களுக்கு ரூ.150 கொடுத்தாலும் ஆட்கள் பற்றாக்குறை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை