உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆற்றில் முதலை கண்காணிப்பு பணி தீவிரம்

அமராவதி ஆற்றில் முதலை கண்காணிப்பு பணி தீவிரம்

உடுமலை : மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில், அச்சுறுத்தி வரும் முதலையை பிடிக்க, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மடத்துக்குளம் அமராவதி ஆற்றில், சில நாட்களாக முதலை தென்படுவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அமராவதி வனச்சரக அலுவலர் விஜயகுமார் தலைமையில், வனவர் சங்கரநாராயணன், வனக்காப்பாளர்கள் நஞ்சப்பன், ஞானசேகரன், முதலை பிடிக்கும் பயிற்சி பெற்ற அலுவலர்கள், முதலைப் பண்ணையில் பணிபுரியும் வனக்காவலர்கள் அடங்கிய குழுவினர், இரு நாட்களாக ஆற்றுப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். அமராவதி வனச்சரக அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பிடிப்பது சிரமமாக இருந்தாலும், மக்கள் நலன் கருதி, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோட்டை சேர்ந்த தன்னார்வலர்களும் உதவுவதாக தெரிவித்துள்ளனர். மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் பொதுமக்களிடமும், ஒத்துழைப்பு அளிக்க கோரியுள்ளோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை